Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் யூடர்ன் அடித்து குஜராத்தை தாக்க வரும் வாயு புயல்!

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (11:11 IST)
அரபிக்கடலில் உருவான 'வாயு' புயல் குஜராத் மாநிலத்தில் கரை கடக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவித்ததால் குஜராத் மாநிலத்தில் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் புதன் இரவு திடீரென வாயு புயல் திசை திரும்பியதால் புயலில் இருந்து குஜராத் தப்பியதாகவும், வாயு புயல் ஓமனை நோக்கி செல்வதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள வாயு புயல் தற்போது திடீரென மீண்டும் திசை திரும்பி குஜராத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் ஜூன் 17 அல்லது 18ஆம் தேதி குஜராத்தின் குட்ச் பகுதியில் கரை கடக்கலாம் என்றும், ஆனால் இப்போதைக்கு இதனை உறுதியாக சொல்ல முடியாது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
வாயு புயல் கடல் பகுதியிலேயே வலுவிழந்து கலைந்துவிடவும் வாய்ப்பு இருப்பதாகவும், கரையை கடந்து தாக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் ஆனாலும் குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை உறுதியாக இருக்கும் என்றும், அதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவியலாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments