Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சிக்கு எதிராக போர்க்கொடி..! பாஜகவில் இருந்து கே.எஸ். ஈஸ்வரப்பா அதிரடி நீக்கம்..!

Senthil Velan
திங்கள், 22 ஏப்ரல் 2024 (21:56 IST)
கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
ஹாவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் காந்தேஷுக்கு பாஜக வாய்ப்பு தராததால் பாஜக மூத்த தலைவரும், கர்நாடகா முன்னாள் துணை முதலமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா அதிருப்தி அடைந்தார்.
 
இதை அடுத்து சிவமோகா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து   சுயேட்சையாகப் போட்டியிடப்போவதாக கே.எஸ்.ஈஸ்வரப்பா அறிவித்திருந்தார்.
 
சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முடிவைக் கைவிடுமாறு ஈஸ்வரப்பாவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார். மேலும், தன்னை டெல்லியில் ஏப்ரல் 3-ஆம் தேதி சந்திக்குமாறும் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார். 
 
இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற ஈஸ்வரப்பா,  மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க முடியாமல் பெங்களூரு திரும்பினார்.  இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கிப் பாருங்கள் என சவால் விட்ட ஈஸ்வரப்பாவை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி பாஜக அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

ALSO READ: வெறுப்பும், பாகுபாடும்தான் மோடியின் உத்தரவாதம்.! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!
 
கர்நாடகாவின் சிவமோகா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்தது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறி ஈஸ்வரப்பாவை 6 ஆண்டுகள் பாஜக நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயபிரபாகரனுக்கு என்னுடைய பதவியா? தேமுதிகவில் இருந்து விலகும் பிரபலம்..!

மோடி, அமித்ஷா எனக்கு தற்கொலை வெடிகுண்டு கொடுத்தால் பாகிஸ்தானை அழிக்கிறேன்: அமைச்சர் பேட்டி

7 கிலோ மீட்டர் தூரத்தில் பக்தர்கள் வரிசை.. திருப்பதியில் கட்டுக்கடங்கா கூட்டம்..!

நாளை முதல் அக்னி நட்சத்திரம்.. மழையும் பெய்ய வாய்ப்பு என தகவல்..!

மீண்டும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. 14 தமிழக மீனவர்கள் காயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments