முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாரமன், இன்று தனது முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் என்னென்ன விஷயங்களை எதிர்ப்பார்க்காலம் என்பதில் சிறு தொகுப்பு இதோ...
1. நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் எதிர்பார்க்கும் வருமானவரி உச்சவரம்பு உயருமா என எதிர்பார்ப்பு
2. பெண்களுக்கு தொழில் தொடங்க வட்டியில்லா கடன்
3. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார வசதி பெறுபவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்குமா என எதிர்பார்ப்பு
4. ஜிஎஸ்டியில் பதிவு செய்த நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம்
5. தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு
6. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் அள்வை குரைக்க வலியுறுத்தல்
7. கார்ப்ரேட் வரி குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல்
8. இயற்கை வேளாண்மைக்கு 100% மானியம் தரப்படுமா என எதிர்ப்பார்ப்பு
9. விவசாயிகளின் கடன் சுமை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கோரிக்கை
10. வாகனங்களுக்கான வரி விதிப்பு குறைக்கப்படுமா என எதிர்ப்பார்ப்பு