Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதாக கிடைக்கும் பாகற்காய் எதற்கெல்லாம் பயன்தருகிறது தெரியுமா...?

Webdunia
பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம். ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந்த மருத்துவ பயன்களை உள்ளடக்கியது.
பல்வேறு நோய்களை போக்கும் நோய் நீக்கியாக விளங்குகிறது. குறிப்பாக பென் மலட்டுத் தனமைக்கு கைகண்ட மருந்தாகிறது. சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்தாகும் பாகற்காய் நாள்பட்ட கழிச்சலை கட்டுபடுத்துகிறது. செரிமானத்தை சீராக்கும்.
 
இதனை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேனீராகவும் குடிக்கலாம். தொடர்ந்து பாகல்சாறு குடித்துவர பல்வேறு நோய்களுக்கு தீர்வு  கிடைக்கும். 
 
பாகற் இலையை பயன்படுத்தி சர்க்கரை நோயை தணிக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு தேவையானவை: பாகற் இலைசாறு, வெந்தயப் பொடி, பெருங்காயத் தூள், மஞ்சள்பொடி. 
செய்முறை: 100மில்லி அளவு பாகற்இலை சாறு எடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி, பெருங்காய தூள், வெந்தயப் பொடி சேர்த்து  கலக்கி தினமும் காலையில் குடித்துவர படிப்படியாக சர்க்கரை நோய் குறையத்துவங்கும்.
 
மலச்சிக்கல், மூலம் மற்றும் வயிற்று புழுக்களை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: பாகற்காய்  சாறு, கடுக்காய் பொடி, சமையல் உப்பு. 
 
செய்முறை: பாகற்காய் சாறில் இரண்டு சிட்டிகை சமையல் உப்பு, அரை தேக்கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து கலக்கி தினமும் படுக்கப்போகும் முன்பு தொடர்ந்து இதனை குடித்துவர மேற்சொன்ன பிரச்னைகளுக்கு எளிய தீர்வு கிடைக்கும். பல்வலியை போக்கும்  மருத்துவம் குறித்து பார்க்கலாம். பல்கூச்சம் மற்றும் வலியை போக்க மிளகுப்பொடி மற்றும் உப்பு கலந்து பற்றுப்போட பல் பிரச்னைகள் தீரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments