Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

Advertiesment
ginger
இஞ்சி என்பது சமையலுக்கும், மருத்துவத்திற்கும் பயன்படும் ஒரு நிலத்தடி கிழங்கு ஆகும். இது தனித்துவமான கார சுவையும், நறுமணமும் கொண்டது. உணவில் சுவை மற்றும் மணம் கூட்ட இஞ்சி சேர்க்கப்படுகிறது. அதேபோல் வயிற்றுப் பொருமல் செரிமான கோளாறு மற்றும் குமட்டலையை சரி செய்யவும் இஞ்சி உதவுகிறது.

அதோடு சளி இருமல் மற்றும் உடல் வலியை போக்க ஆயுர்வேத மருத்துவத்திலும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை அது பற்றி இங்கே பார்ப்போம்:

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு தேனில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..