Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் ஏற்றதா...?

Webdunia
திங்கள், 30 மே 2022 (13:11 IST)
சாத்துக்குடி எண்ணற்ற மருத்துவ பயன்களை உள்ளடக்கியது. அஜீரண பிரச்சனைகள், மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்ற இரைப்பைக் கோளாறுகளை குணப்படுத்த சாத்துக்குடி உதவுகிறது.


சாத்துக்குடி அஜீரண கோளாறுகளைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. சாத்துக்குடி சாப்பிட்டு வந்தால் இரைப்பையில் அதிகப்படியான அமிலம் சுரப்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சலைத் தடுக்கும். சாத்துக்குடி ஜூஸ் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சாத்துக்குடி ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பொதுவாக சளி பிடித்திருக்கும் போது எந்த ஜூஸையும் குடிக்கக்கூடாது. ஆனால் சாத்துக்குடி ஜூஸைக் குடிக்கலாம். ஏனென்றால் சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

தினமும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், இதில் உள்ள வைட்டமின் சி உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

சாத்துக்குடியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் வளமான அளவில் இருப்பதால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் மெட்டபாலிச கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும். எனவே தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments