Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களை கொண்டுள்ள மங்குஸ்தான் பழம் !!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (14:18 IST)
மங்குஸ்தான் பழத்தில் எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.

உடல் கொழுப்பை அல்லது உடல் இடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு சிறந்த வரபிரசாதம். மங்குஸ்தான் பழத்தைத் தினமும் ஒரு முறை என மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும்.
 
மங்குஸ்தான் பழத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் அறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச் சத்துப் பொருள் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைத்து கொலஸ்டிரால் அளவை சமப்படுத்துகிறது.
 
மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு ‘வைட்டமின் சி’ சத்து அடங்கியுள்ளது. இது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும்.
 
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. பருவ காலங்களில் மங்குஸ்தான் பழங்களை வாங்கி சாப்பிடுவது மிகவும் நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments