Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பதால் என்ன பலன்கள்....?

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (18:28 IST)
கிரீன் டீ எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சருமம், தலைமுடி ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் சருமத்தையும் தலை முடியையும் மேம்படுத்த உதவுகிறது.


கிரீன் டீயை வெறும் வயிற்றிலும், உணவு சாப்பிட்டவுடனும், தூங்க செல்லும் முன்னும் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த 3 வேளைகளிலும் குடித்தால் உடலுக்கு எண்ணற்ற பாதிப்புகள் உண்டாகும்.

கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. மூச்சு சம்மந்தமான  பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன.

நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சம்மந்தமான் நோய்கள் வராமலும் பாதுக்காக்கிறது. கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகிவருவதால் பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும்.

உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும்.

கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டி சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments