சளியை குறைக்க நீராவி பிடித்தல், வெதுவெதுப்பான நீரைப் பருகுதல் போன்ற விஷயங்களை செய்து வரலாம். இதனால் நுரையீரலில் இருந்து அதிகப்படியான சளியை வெளியேற்ற முடியும்.
1 தேக்கரண்டி தேனை 1 தேக்கரண்டி இஞ்சி சாறுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த சிரப்பை பருகி வர தொண்டைப் புண் மற்றும் வறட்டு இருமலை போக்க முடியும். ஒரு நாளைக்கு 3 முறை என தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். தொண்டை வலியால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இஞ்சி உதவுகிறது. தேன் சளியை வெளியேற்றவும் இருமலை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.
சளியை நீக்க துளசி சாறு, இஞ்சி சாறு சம அளவு கலந்து குடிக்கலாம். தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம். இருமல் குணமாக மாதுளம்பூ பொடியுடன் பனங்கல்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம்.
நீரேற்றமாக இருப்பது சுவாச பாதையில் இருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது. எனவே நிறைய தண்ணீர் எடுத்து வாருங்கள். இது தொண்டையில் உள்ள சளியை மெல்லியதாக மாற்ற உதவுகிறது. எனவே சளித் தொல்லை இருக்கும் சமயங்களில் வெதுவெதுப்பான நீரை குடிப்பது நல்லது.
புதினா தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சளியை வெளியேற்ற உதவுகிறது.