சுவையான சில்லி இறால் மசாலா செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
இறால் - அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பெரியவெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (அரைத்தது)
பச்சை மிளகாய் - 8
கரிவேப்பிலை - 3 கொத்து
கெட்டி தேங்காய்பால் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காய விழுதினை சேர்த்து வதக்கவும்.பச்சை வாசனை நீங்கியதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,  கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
 
எண்ணெய் தனியாக பிரிந்தவுடன் இறாலை சேர்த்து கிளறவும்.முக்கால் பாகம் வெந்தவுடன் தேங்காய்பால் சேர்க்கவும்.இறால் வெந்து மசாலா கெட்டியானவுடன் மல்லி தழை தூவி இறக்கினால் சுவையான இறால் சில்லி மசாலா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments