Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான ஒரே வாரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்: தென்காசியில் பரபரப்பு

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:46 IST)
திருமணம் ஆன ஒரே வாரத்தில் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்காசி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நெல்லை மாவட்டம் கடையம் என்ற பகுதியைச் சேர்ந்த இசக்கிலட்சுமி என்ற இளம் பெண்ணுக்கு கடந்த ஒன்றாம் தேதி திருமணம் நடக்க இருந்தது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவருடன் இசக்கிலட்சுமி ஓடிவிட்டதால் திருமணம் நின்று போனது 
 
இந்த நிலையில் ராம்குமார் இசக்கிலட்சுமி  திருமணம் செய்து சென்னையில் வாழ்ந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனை அடுத்து இசக்கி லட்சுமி தனது சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார்
 
இந்த நிலையில் நேற்று இசக்கிலட்சுமி தனது உறவினர் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவருடைய கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments