Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரொனா உறுதி!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (21:45 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவிய வரும் நிலையில், இத்தொற்றைத் தடுக்க, அனைத்து நாடுகளும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரொனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், பொதுஇடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தி வருகிறது.

சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரொனா தொற்றுப்பரவல், மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒன்று ஒரே நாளில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 (ஆண்கள் -22, பெண்கள் -15)  பேராக அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் கோவையில் மட்டும் 9 பேர் என மொத்தம் 14 மாவட்டங்களில் இத்தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

இறக்குமதிக்கு தடை.. கப்பலும் வரக்கூடாது. பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments