Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலி செய்த துரோகம்: கொன்று புதைத்த கள்ளக்காதலன்

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (07:37 IST)
தன்னிடம் மட்டுமின்றி வேறு ஒருவரிடமும் நெருக்கமாக இருந்த கள்ளக்காதலியை கள்ளக்காதலன் கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்த சம்பவம் வேலூர் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அருகேயுள்ள ரெட்டிவலசை என்ற பகுதியை சேர்ந்தவர் 32 வயது சுதா. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் ஒரே பெண் குழந்தையுடன் தனித்து வசித்து வந்தார். இந்த நிலையில் சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் இடையே முதலில் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது நட்பு, காதல் என மாறியது. இருவரும் கணவன், மனைவி போலவே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் விரைவில் முறைப்படி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது

இந்த நிலையில் சதீஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் சுதா வேறு ஒருவருடனுன் உல்லாசமாக இருந்ததாகவும், இதனை கையும் களவுமாக கண்டுபிடித்த சதீஷ் ஆத்திரமடைந்ததாகவும் இதனால் இருவருக்கும் இடையே சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் சுதாவை சமாதானம் செய்து ஆற்றங்கரைக்கு அழைத்து சென்ற சதீஷ், அங்கு அவரை கொலை செய்து புதைத்துவிட்டார். பின்னர் காவல்நிலையத்தில் தன்னுடைய காதலியை கொலை செய்துவிட்டதாக சரண் அடைந்தார். சுதாவின் பிணத்தை கைப்பற்றிய போலீசார் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்