Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அறிக்கையில் கூறிய ரூ.5 விலைக்குறைப்பு எப்போது? முதல்வருக்கு அன்புமணி கேள்வி!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (17:30 IST)
தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை ரூபாய் 5 குறைக்கப்படும் என திமுக கொடுத்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்? என முதல்வர் முக ஸ்டாலின் இடம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து அன்புமணி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ100-ஐத் தொட்டுள்ளது. கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.95க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.64 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதிக்கும்.  கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் மத்திய அரசு வசூலிப்பது தான் விலை உயர்வுக்கு காரணம். தமிழக அரசின் வரியையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.58.28, டீசலுக்கு ரூ.50.13 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது நியாயமல்ல
 
தமிழ்நாட்டில் மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியாக பெட்ரோலுக்கு ரூ.25.38 (34%), டீசலுக்கு ரூ.18.33 (25%) வசூலிக்கப்படுகிறது.  மத்திய அரசு வரியில் மாநில அரசின் பங்கையும் சேர்த்து தமிழக அரசுக்கு முறையே ரூ.39.19, ரூ.31.68 வருமானமாக கிடைக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.10 வீதம் மொத்தம் ரூ.20 குறைக்க முன்வர வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.
 
தமிழகத்தில் தற்போது பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்கி வரும் நிலையில் ஒரு சில இடங்களில் 100ஐ தொட்டுவிட்ட நிலையில் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை குறைக்காத நிலையில் தமிழக அரசு கருணை காட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments