Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் விலக்கு வேண்டுமென்றால் இதை செய்யுங்கள்.. திமுகவுக்கு அண்ணாமலை தந்த ஐடியா..!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (09:23 IST)
தமிழகத்திற்கு உண்மையாகவே நீட் விலக்கு தேவை என்றால் இதை செய்யுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு நீட் விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த திமுக தற்போது கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. இந்த கையெழுத்து இயக்கத்தால் நீட் விலக்கு வந்துவிடுமா என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து அண்ணாமலை கூறியபோது நீட் விலக்கு கோரி உண்மையாகவே திமுக  நினைக்கும் என்றால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் எங்களுக்கு நீட் விலக்கு வேண்டும் என்று மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆனால் திமுக கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் காவிரி பிரச்சனைக்கு கர்நாடக மாநில அரசுக்கு கடிதம் எழுதாமல் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி வருகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.  தமிழகத்தில் பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில் ஆரியம் திராவிடம் பற்றி முதல்வர் மு க ஸ்டாலின் பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments