Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

Sising Raja

Senthil Velan

, திங்கள், 23 செப்டம்பர் 2024 (12:29 IST)
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இல்லை என்று சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
 
சென்னை நீலாங்கரை அருகே ரவுடி சீசிங் ராஜா இன்று காலை என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.  இந்த என்கவுண்டர் சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார். ஆந்திரவின் கடப்பா அருகே உள்ள ராஜம்பேட்டை பகுதியில் சீசிங் ராஜாவை போலீசார் கைது செய்ததாகவும் தொடர்ந்து வேளச்சேரி போலீசாரிடம் இரவு ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்து விசாரித்துவிட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ய கேட்ட போது, நான் கூட்டிட்டு போய் காட்டுகிறேன் என சீசிங் ராஜா சொல்லியிருக்கிறார். முதலில் இரண்டு இடம் காட்டினார். அந்த இடத்தில் இல்லை. மூன்றாவது ஒரு இடத்தை காட்டும் போது ஒரு நாட்டுத்துப்பாக்கி அந்த இடத்தில் இருக்கிறது. அதை எடுத்துகொடுப்பது போல செய்கை செய்துவிட்டு இரண்டு ரவுண்டு சுட்டார். அவருடன் சென்றிருந்த இரண்டு இன்ஸ்பெக்டர்களில் ஒருவரை பார்த்து சுடுகிறார்.
 
அதிர்ஷ்டவசமாக குண்டுகள் இரண்டுமே இன்ஸ்பெக்டர் மீது படவில்லை. வண்டியின் மீதுதான் பட்டுள்ளது. இதனால் இன்ஸ்பெக்டர் தப்பித்து ஓடுகிறார். இந்தபக்கம் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் தற்காப்புக்காக வேறு வழியில்லாமல் இரண்டு ரவுண்டு சுடுகிறார். இதில் காயம் அடைந்த சீசிங் ராஜா மயங்கி விழுகிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 39 வழக்குகள் உள்ளது. மூன்று மாதத்திற்கு முன்பாக தேடப்படும் குற்றவாளியாக மாஜிஸ்திரேட்டு அறிவித்தார். இவர் கோர்ட்டில் ஆஜரகாவில்லை. 10 வாரண்ட் பெண்டிங் உள்ளது. தலைமறைவாகவே இருந்து வந்தார். ஆம்ஸ்ட்ராங்க் வழக்கிற்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!