Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்களோட உண்மையான பெயர் என்ன?!.. சீமானை சீண்டிய புளூசட்டமாறன்!..

Advertiesment
seeman vijay
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததும் தன்னை சி.ஜோசப் விஜய் என அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகிவிட்ட நிலையில் அவருடைய அதிகாரப்பூர்வ பெயரஏ சி.ஜோசப் விஜய் என மாறிவிட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘ தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் போது ஏன் பெரம்பூர் மற்றும் திருச்சி ஆகிய தொகுதிகளில் நீங்கள் நின்றீர்கள்? பெரம்பூரில் மதம், திருச்சி கிழக்கில் சாதி மற்றும் மதம் அவ்வளவுதான்.. நீங்கள் சாதியை ஒழித்து விட்டீர்கள் என்று பேசுகிறீர்கள்..

‘சினிமாவில் நடிக்கும் போது வராத ஜோசப் என்ற பெயர் அரசியலுக்கு வரும் போது எப்படி வந்தது? முதலமைச்சரானவுடன் ஜோசப் விஜய் என்று போடுகிறீர்கள்.. ஏன் முதல் படத்தில் ஜோசப் என்று போடவில்லை?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரபல சினிமா விமர்சகர்  புளூசட்ட மாறன் ‘இந்த கேள்வியை உங்கள் ஆருயிர் நண்பர் ஹெச். ராஜாவிடம் கேளுங்கள்.. விஜயை ஜோசப் என மதரீதியாக அடையாளப்படுத்தியது அவர்தான். அதுசரி உங்கள் உண்மையான பெயர் சீமானா?’ என கேள்வி எழுப்பி இருக்கிறார்..

இதற்கு கமெண்ட்டில் பதிவிடும் நெட்டிசனக்ள் ‘அவரின் உண்மையான பெயர் செபாஸ்டியன் சைமன்.. தன்னை செந்தமிழர் சீமான் என அவரே அழைத்துக்கொள்கிறார்?’ என பதிவிட்டு வருகிறார்கள்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8வது ஊதியக் குழு.. முக்கிய பணியை முடித்துவிட்ட மத்திய அரசு.. அறிவிப்பு எப்போது?