Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

14 நாட்களாகியும் கிடைக்காத செஞ்சி சிறுமி!.. சிபிசிஐடி அதிரடி முடிவு..

Advertiesment
girl
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கிராமத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வீட்டில் தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போனார். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை பல நாட்கள் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

எனவே, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் கடந்த சில நாட்களாக இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். சிறுமியின் உடல் கிடைக்காததால் அவள் கொல்லப்படவில்லை என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கடந்து சில நாட்களாக சிறுமியின் தாயிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மயக்கம் மருந்து தெளித்து சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று அடிப்படையில் விசாரணை ரயில் நிலையங்களிலும் அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனாலும் இரண்டு வாரங்களாகியும் சிறுமியை பற்றி துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போன வழக்கை கூடுதலாக விசாரிக்க காஞ்சிபுரம் சிபிசிஐடி டி.எஸ்.பி வேல்முருகன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு!.. அன்பில் மகேஷ் கைது!..