Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு; கே.எஸ் அழகிரி

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (11:55 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து ஒவ்வொருவராக விடுதலையாகி வருகின்றனர் 
 
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது ஆபத்து என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஏற்கனவே 7 பேர் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதற்கு காங்கிரஸ் கட்சியை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனையோ இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் அவர்களை விடுதலை செய்யாமல் ராஜீவ் காந்தி கொலையில் கைதானவர்களை விடுதலை செய்து இருப்பது தவறு என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார் 
 
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் 7 தமிழர்கள் விடுதலையை கொண்டாடி வரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சி மட்டும் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

சென்னையில் விரைவில் ஏசி மின்சார ரயில்.. ஐ.சி.எஃப் அதிகாரிகள் தகவல்..!

அமெரிக்கர்களை திருமணம் செய்தால் குடியுரிமை: ஜோ பைடனின் திட்டம் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments