Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சைக்குள்ளான எம் எல் ஏ திருமணம்… கணவருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (17:24 IST)
கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பிரபு சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவரது மனைவியை ஆஜர் படுத்த சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு. இவர் அதிமுக கட்சிக்காக போட்டியிட்டு 2016 ஆம் அனடு சட்டமன்ற உறுப்பினரானார். இந்நிலையில் இவர் இப்போது கல்லூரி மாணவி ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தை பிரபுவின் பெற்றோரே தலைமையேற்று மிகவும் எளிமையான முறையில் நடத்தி வைத்தனர். விரைவில் முதல்வரை சந்தித்து தங்கள் திருமணத்துக்காக வாழ்த்துகளைப் பெற உள்ளாராம் பிரபு.

சாதி மறுத்து திருமணம் செய்து கொள்பவர்களை பெற்றோர்களே ஆணவக் கொலை செய்யும் இந்த நேரத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரே முன்மாதிரியாக் இதுபோல திருமணம் செய்து கொண்டு இருப்பது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் பெண்ணின் தந்தை பிரபு வீட்டுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளாவது ‘நான் சாதி மத பேதம் பார்ப்பவன் இல்லை. என் மகளுக்கும் பிரபுவுக்கும் 20 வயது வித்தியாசம். 20 வயசு வித்தியாசத்தை எப்படி ஏத்துக்கறது? அதனால்தான் பெட்ரோலை ஊற்றிக்கிட்டு தற்கொலைக்கு முயன்றேன்.’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் எம் எல் ஏ பிரபுவோ பெண்ணின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துகொண்டதாகவும், அவரை மயக்கி திருமணம் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அந்த பெண்ணும் தன்னை யாரும் கடத்தவில்லை என வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் பெண்ணின் தந்தைக்கு எந்த மிரட்டலும் விடவில்லை எனக் கூறியுள்ளார். இந்நிலையில் எம் எல் ஏ பிரபு தன் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று சவுந்தர்யாவை போலீசார் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் சவுந்தர்யா தனது தந்தையுடன் தனியாக உரையாட அனுப்பப்பட்டார். அதன் பிறகு சவுந்தர்யா கணவனுடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து  ஏற்ற நீதிபதிகள் கணவர் பிரபுவுடன் சவுந்தர்யா செல்ல அனுமதி வழங்கியதுடன் வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து  மேல்முறையீடு செய்ய உள்ளதாக, பெண்ணின் தந்தை சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments