Publish Date: Mon, 27 Jul 2026 (12:51 IST)
Updated Date: Mon, 27 Jul 2026 (12:58 IST)
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழக ஆட்சி தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான், முதல்வர் ஜோசப் விஜயின் அலுவலகம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாறுகிறது. இதற்கான பணிகள் தற்போது வேகமாக தற்போது நடைபெற்று வருகிறது. இட பற்றாக்குறை காரணமாகவே முதல்வரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இது ற்றி கருத்து தெரிவித்த சிபிஐ எம்பி சுப்பராயன் முதல்வரின் அலுவலகம் தலைமை செயலகம் 10வது தளத்திற்கு மாறுகிறது.. மேலும் துணை நகரமாக புதிய தலைமைச் செயலகம் உருவெடுக்கிறதாம்.. இதற்கெல்லாம் திட்ட மதிப்பீடு எவ்வளவு?.. பற்றாக்குறை நிதி நிலையில் இதுவெல்லாம் தேவைதானா?
நிதி வருவாய் அதிகரிக்க திட்டமிட வேண்டிய நிர்பந்தம் உள்ள நிலையில் இந்த செலவு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத அவசியமா? அல்லது தண்டச் செலவுதானா? செலவுகளை குறைத்து வருவாய் அதிகரிக்க திட்டமிட வேண்டிய மாநில அரசு அவசியமற்ற செலவுகளை அதிகரிப்பதில் குதிரை வேகம் காட்டுகிறது.. இடுப்பாரை இல்லாத மன்னனாக பயணிப்பது ஆபத்து.. கடிவாளம் இல்லாத குதிரை பயணம் பாதுகாப்பாற்றது என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க