Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 ரூபாய் தரிசன கட்டணம் 2 ஆயிரமாக திடீர் உயர்வு! – திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (10:56 IST)
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வரும் நிலையில் தரிசன கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



திருச்செந்தூரில் நேற்று முன் தினம் கந்த சஷ்டி விழா தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக எதிர்வரும் சனிக்கிழமை சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது. இதனால் இந்த வாரம் முழுவதுமே பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி வருகை தரும் நிலையில் கட்டணங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்தர்கள் சிறப்பு தரிசன வரிசை, பொது தரிசன வரிசை என இரண்டு வழிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அதில் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.100 கட்டணமாக இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல சாதாரண நாட்களில் ரூ.500, விசேஷ நாட்களில் ரூ.2000 என வசூலிக்கப்பட்டு வந்த அபிஷேக தரிசன கட்டணம் தற்போது ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல கோயில் கடற்கரை பேருந்து நிலையத்திற்குள் செல்லும் அரசு பேருந்துகளுக்கும் நுழைவு கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டதால் அரசு பேருந்துகள் அப்பகுதிக்கு செல்வதில்லை என்றும் பக்தர்கள் பலர் நடந்தே செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments