Publish Date: Tue, 06 Oct 2026 (13:50 IST)
Updated Date: Tue, 06 Oct 2026 (13:55 IST)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணியளவில் இடைத்தேர்தல் துவங்கியது. அதில், காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99 சதவீத வாக்குகளும், தாராபுரத்தில் 17.55 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தது.
தற்போது ஒரு மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 55.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் மதியம் ஒரு மணி நிலவரப்படி 57.25 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இதை ஒப்பிடும்போது 2.07 சதவீதம் குறைவாகவிருக்கிறது. அந்த தொகுதியில் 2.13,787 வாக்களர்கள் உள்ள நிலையில் 1 மணி நிலவரப்படி 1,17,968 பேர் வாக்களித்துள்ளனர். இன்னும் 95,820 பேர் வாக்களிக்க வேண்டும்.
அதேபோல், தாராபுரத்தில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 17.55 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், மாலை 1 மணி நிலவரப்படி 56.09 வாக்குகள் பதிவாகியிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு மணி நிலவரப்படி இந்த தொகுதியில் 55.42 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அந்த தொகுதியில் 2.23,306 வாக்களர்கள் உள்ள நிலையில் 1 மணி நிலவரப்படி 1,25,252 பேர் வாக்களித்துள்ளனர். இன்னும் 98,054 பேர் வாக்களிக்க வேண்டும்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க