Publish Date: Mon, 13 Aug 2018 (08:45 IST)
Updated Date: Mon, 13 Aug 2018 (08:38 IST)
கோவையை சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சின்னச்சாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திடீரென கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சின்னச்சாமி அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக சங்கத்தின் சார்பில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த சின்னசாமி தற்போது டிடிவி தினகரனின் கட்சியான அமமுகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.