சசிகலா சிறையில் இருந்து வெளிவரக்கூடாது என தினகரன் நினைக்கிறார் என திவாகரன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
அண்ணா திராவிடர் கழகத்தை நடத்தி வரும் திவாகரன், உள்ளாட்ச் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்துள்ளார். அதோடு தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார். திவாகரன், தினகரன் குறித்து கூறியதாவது,
சசிகலா என் சகோதரி என்ற முறையில் அவரை காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறேன். அவரை மீட்க வழியில்லாமல் இல்லை. ஆனால் இதற்கு சசிகலா எங்களை அனுமதிக்க வேண்டும்.
சசிகலாவை வீழ்த்த எதிரி வெளியில் இருந்து வந்திருந்தால் தலையை சீவியிருப்பேன். ஆனால் குடும்பத்துக்கு உள்ளேயே எதிரி என்பதால் கையை பிசைந்து கொண்டிருக்கிறேன்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது என்று தினகரன் நினைக்கிறார். தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு சுத்தமாக இல்லை என நடந்து முடிந்த தேர்தக் நிரூபித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
எப்போதும் தினகரன் மீது குற்றம்சாட்டி வரும் திவாகரன் இம்முறையும் அதையே செய்தாலும், ஆனால் சசிகலாவிற்கு தினகரன் உண்மையாக இல்லை என்ற விதத்தில் பேசியிருப்பது அரசியலிலும் குடும்பத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.