Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீல் மேட்டர் ஓவர்: திமுகவில் இணையும் தேமுதிக?

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (15:42 IST)
தேமுதிக திமுகவில் இணைய இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மக்களவை தேர்தலுக்காக அதிமுக பாஜகவிற்கு 5 தொகுதியும், பாமகவிற்கு 7 தொகுதியும் ஒதுக்கியுள்ளது. 
 
திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை வழங்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 1 தொகுதிகளை வழங்கியுள்ளது. 
 
தேமுதிக அதிமுகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. பாமகவிற்கே 7 சீட் கொடுத்தபோது, தங்களுக்கு 7க்கும் அதிகமான சீட் வேண்டும் என தேமுதிக ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டது. ஆனால் அதிமுக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
 
இந்த சந்தரப்பத்தை பயன்படுக்கொள்ள முற்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக கேப்டன் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். தேமுதிக அதிமுக பக்கம் சாய இருக்கிறதா அல்லது திமுக பக்க செல்லப்போகிறதா என்ற குழப்பம் நீடித்து வந்தது. 
 
இந்நிலையில் திமுக தேமுதிகவிற்கு 3 லோக்சபா சீட்டுகளும் 1 ராஜ்யசபா சீட்டுகளையும் தர முன்வந்திருக்கிறது. ஆனால் தேமுதிக இன்னும் ஒரு லோக்சபா சீட்டை எக்ஸ்ட்ரா கேட்கிறார்களாம். கிட்டதட்ட தேமுதிக - திமுக கூட்டணி உறுதியாகிவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments