Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தல் தோல்விக்கு முழு காரணம் திமுகவே: திருமாவளவன் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 31 அக்டோபர் 2019 (08:32 IST)
சமீபத்தில் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக கூட்டணி தோல்வி அடைந்தது. இந்த இரு தொகுதிகளும் திமுக கூட்டணியின் கைவசம் இருந்த நிலையில் தற்போது இந்த தொகுதிகள் அதிமுகவுக்கு கைமாறியது திமுக தொண்டர்களையும் தலைவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
 
குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திமுக, விக்கிரவாண்டி தொகுதியில் படுதோல்வி அடைந்ததை தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
 
இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து கூறிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள், ‘வன்னியர்களுக்கு சலுகைகள் தருவதாக திமுக அறிவித்த உத்தியே தோல்விக்கு காரணம் என்று கூறினார். திமுகவின் இந்த அறிவிப்பு வன்னியர் அல்லாத பிற சமூக மக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்ததாகவும் அதனால் வாக்குகள் கிடைக்காமல் போனதாகவும் தெரிவித்தார். திமுகவின் இந்த அறிவிப்பே அக்கட்சியின் தோல்விக்கு முழுமையான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தோல்வியை அடுத்து திமுக நிர்வாகிகள் மீது தலைவர் முக ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments