Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்பிக்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (21:33 IST)
டெல்லியில் இன்று திமுக எம்பிக்கள் காஷ்மீர் பிரச்சனைக்காக மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் தற்போது ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே தி.மு.க சார்பில் அக்கட்சியின் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதற்காக நன்றி அறிவிப்பு கூட்டம் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த அந்த கூட்டம் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த நன்றி அறிவிப்பு கூட்டம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
 
திமுக திட்டமிட்ட கூட்டம் என்றால் அந்த கூட்டங்கள் சரியான நேரத்தில் நடைபெறும் என்பதுதான் கடந்த கால வரலாறு. ஆனால் தற்போது அடிக்கடி திட்டமிடப்பட்ட கூட்டங்கள் வேறு தேதிகளுக்கு மாற்றுவதை திமுக தொண்டர்கள் வித்தியாசமாக பார்க்கின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments