Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீவே விட்டாலும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரனும்!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (12:56 IST)
மே 20 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 
இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் காரணமாக பல மாநிலங்களிலும் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் வெயில் காரணமாக பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைத்தல் மற்றும் முன்கூட்டிய விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்து வந்தன.
 
இதனை ஏற்று, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நாளையுடன் முடிவடைகின்றன நிலையில் நாளை மறுநாள் (மே 14) முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மே 20 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வகுப்புக்குள் இல்லாவிட்டாலும் விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments