Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அழுத்தமாகச் சொல்லுங்கள்- ஈபிஎஸ்

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (14:30 IST)
அடுத்தாண்டு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.

இக்கூட்டணியில் இருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக விலகியது.

சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எழுதிய கடிதத்தில், ‘பாஜகவுக்கு -நன்றி மீண்டும் வரவேண்டாம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது வலைதளங்களில் ஹேஸ்டேக்காக வைரலானது.

இந்த நிலையில், தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிமுக தலைமை தயார் செய்து வருகிறது.

இந்த நிலையில்,’’ பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்’’ என்று அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், ‘’தேர்தல் பணியில் மாவட்ட செயலாளர்களின் தலையீடு இருந்தால் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்றும், மாவட்டசெயலாளர்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்காமல், கட்சிக்காக தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துங்கள்’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

பிரபல நடிகையின் செல்போன் ஹேக்.. டெலிகிராமில் ஆபாச புகைப்படங்கள்.. அதிர்ச்சி தகவல்..!

100 ஆடம்பர அறைகள்: அரண்மனையை 5 நட்சத்திர ஓட்டலாக மாற்றும் டாடா நிறுவனம்..

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments