Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு எப்போது?

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (09:13 IST)
பொறியியல் கலந்தாய்வு வருகிற செப் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக +2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் அனைவருக்கும் ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் +2 மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டது.  
 
இந்நிலையில் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் அதாவது ஜூலை 26 முதல் ஆகஸ்ட்  24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை முன்னதாக அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு இன்று முதல் துவங்கியது. பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org என்ற இணைய தளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
 
இதை தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு வருகிற செப் 7 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. அத்துடன் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments