Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து.. தமிழக அரசின் அதிரடி முடிவு..!

Mahendran
வெள்ளி, 5 ஜனவரி 2024 (15:56 IST)
திருவண்ணாமலை அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடிய நிலையில் அவர்களில் ஏழு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. ஏற்கனவே ஆறு பேர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அருள் என்ற விவசாயி மீது மட்டும் குண்டர் சட்டம் ரத்து செய்யப்படாமல் இருந்தது. 
 
இந்த நிலையில் அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது. முன்னதாக  தனது கணவர் அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது மனைவி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அருள் எந்த ஒரு தீவிரவாத கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான முகாந்திரம் இல்லாத நிலையில் மக்களை தூண்டியதாகவும் நிலம் வாங்க முன் வருபவர்களை தடுத்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது 
 
100 நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்துள்ள நிலையில் உள்நோக்கத்தோடு தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கருதுகிறோம் என்று நீதிபதிகள் கருத்துக்களை பதிவு செய்தனர் 
 
இந்த நிலையில் விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

சென்னை வந்த விமானம் மீது விழுந்த லேசர் லைட்.. நிலைகுலைந்த விமானி.. அதிர்ச்சி தகவல்..!

வெள்ளத்தால் கரைந்த மொத்த உப்பு.. ஒரு கிலோ ரூ.145க்கு விற்பனை.. அண்டை நாட்டுக்கு கைகொடுத்த இந்தியா..!

இந்தியாவின் முதல் எதிரி பாகிஸ்தான் இல்லையாம்! எந்த நாடு தெரியுமா? - அமெரிக்க புலனாய்வு அமைப்பு ரிப்போர்ட்!

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments