Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுக்கு ஊக்கத் தொகையுடன் இலவச குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை.. தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (16:20 IST)
ஆண்களுக்கு ஊக்கத் தொகையுடன் இலவச  குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது போல் ஆண்களுக்கும்  குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்கள் பெரும்பாலும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதில்லை.

இந்த நிலையில் ஆண்களுக்கு தமிழகம் முழுவதும்  குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாகவும்   குடும்ப கட்டுப்பாடு செய்ய வரும் ஆண்களுக்கு ஊக்கத்தொகை மற்றும்  இலவசமாக சிகிச்சை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை வார விழா கடைபிடிக்கப்படுவதாகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆண்களுக்கு இலவச குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments