Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு! அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (07:15 IST)
நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா முழுவதும் நீட் எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால் இதற்கு பல இடங்களில் எதிர்ப்புக் கிளம்பியும் மத்திய அரசு பின்வாங்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. வசதி படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு நீட் கோச்சிங் உள்ளிட்ட வசதிகள் கிடைப்பது போல ஏழை மாணவர்களுக்கு எந்த வசதி வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 66 சதவீதம் பேர் இரண்டாவது முறை தேர்வெழுதியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு குரல்கள் எழுந்துள்ளன. இதனால் மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆலோசனை நட்த்தி வருகிறது. இது சம்மந்தமாக  நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழு ஆய்வுகளை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரையை அரசு ஏற்கும் பட்சத்தில் 10 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்புகள் உருவாகும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று கூடிய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அதிகளவிலான அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments