Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழக்கம் எதுக்கு? உதயநிதியை சீண்டும் எச் ராஜா!!

Webdunia
வியாழன், 7 மே 2020 (12:46 IST)
பாஜக மூத்த தலைவர் எச் ராஜா திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சீண்டும் வகையில் டிவிட் ஒன்றை போட்டுள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் 43 நாட்களாய் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.  
 
சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கி செல்கின்றனர். 
 
பல இடங்களில் ஒருவருக்கு ஒரு மது பாட்டில் மட்டுமே வழங்கப்படும் என விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து, தலைவர்  அவர்களின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் இளைஞரணியினர் கருப்புச் சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன்பு நின்று கொரோனா ஒழிப்பில் தோல்வி அடைந்த அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். 
 
இவரை சீண்டும் வகையில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா. முழக்கம் எதுக்கு. திமுக தலைவர்கள் நடத்தும் மதுபான ஆலைகளை மூடச் சொல்ல வேண்டியதுதானே. மக்களை ஏமாற்றும் திமுக என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments