Publish Date: Mon, 11 Jun 2018 (15:58 IST)
Updated Date: Mon, 11 Jun 2018 (16:06 IST)
அமைதியை சீர்குலைக்க வைக்கும் விதத்தில் பேசும் சீமான், வைகோ, பாரதிராஜா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக அரசால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைந்துள்ளது. ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையிலும், அமைதியை சீர்குழைக்கும் வகையிலும் பேசும் வைகோ, சீமான், திருமுருகன்காந்தி, பாரதிராஜா ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்களை கொச்சையாக பேசிய பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகரை அடக்க முடியவில்லை, இவர் அடுத்தவர்களை பற்றி பேச வந்துவிட்டார் என பலர் எச்.ராஜாவை கிண்டலடித்து வருகின்றனர்.