Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போ முகத்தை பார்ப்பாங்க!.. இப்ப கைய பாக்குறாங்க!.. ஜே.சி.டி பிரபாகர் பேச்சு!.

மகேந்திரன்
வியாழன், 27 ஆகஸ்ட் 2026 (13:32 IST)
தற்போது தமிழக சட்டசபையில் ஆட்ட நாயகன் என நெட்டிசன்களால் அழைக்கப்பட்டு வருபவர் ஜே.சி.டி பிரபாகர். 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர். 1980 முதல் ஜெயலலிதா காலம் வரை இவர் அதிமுகவில் இருந்தார்.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இவர் அரசியலில் இருப்பதால் இவரை சபாநாயகராக அமர வைத்தார் முதல்வர் ஜோசப் விஜய். அவரின் கணிப்பு தவறவில்லை.. சட்டசபையில் நிகழ்வுகளை மிகவும் சரியாகவும், நியாயமாகவும் நடத்தி வருகிறார் ஜே.சி.டி பிரபாகர். பொதுவாக சபாநாயகர் என்பவர் ஆளும்கட்சிக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுவார்கள்.. ஆனால், ஜே.சி.டி  பிரபாகர் அப்படி இல்லாமல் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்து அவையை நடத்தி வருகிறார்..

இந்நிலையில்தான், நேற்று ராசாராம் நூற்றாண்டு விழாவில் பேசிய ஜே.சி.டி பிரபாகர் தன் வாழ்வில் நடந்த ஒரு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.. 1980களில் சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தேன்.. அப்போது எம்ஜிஆரை பார்த்து பல நற்குணங்களை கற்றுக் கொண்டேன். 2011ம் வருடம் மீண்டும் நான் எம்எல்ஏ ஆனேன். அப்போது என்னை பார்த்து ஒருவர் ‘1980ல் எம்எல்ஏவாக இருந்தாய்.. அதன்பின் 2011ல் எம்எல்ஏ ஆகியிருக்கிறாய்.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?’ என்று கேட்டார்..

அதற்கு நான் ‘80களில் நான் பார்த்த அரசியல் தலைவர்கள் என் முகத்தைப் பார்த்து நலம் விசாரித்தார்கள்.. ஆனால் இப்போது கையை பார்க்கிறார்கள்’ என்று சொன்னேன்.. அரசியல் எப்படியெல்லாம் மாறிக்கொண்டு வந்தது என்பதை நான் பார்த்தேன்’  என சொல்லியிருக்கிறார்.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் என்னை மீட் பண்ணாம லண்டன் போயிட்டாருன்னு யார் சொன்னா?!.. மலேசிய பிரதமர் பேட்டி!..

ஐடி வேலை இனி வேண்டாம்.. உபேர் கார் ஓட்டினால் வாரம் ரூ.46000 வருமானம்.. மாற்றி யோசிக்கும் ஜென் சி

காவிரி படுகை பகுதியில் ஐந்து புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள்.. விவசாயிகள் கடும் எதிர்ப்பு...

வெளியே ஒரு கட்டணம்.. உள்ளே வந்தவுடன் இன்னொரு கட்டணம்.. ஆம்னி பேருந்துகளின் அட்டகாசம்...

விஜய் சேதுபதிக்கு நாங்க துணையா நிப்போம்!.. களத்தில் இறங்கிய அதிமுக...

அடுத்த கட்டுரையில்
Show comments