Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறு வேலை வாங்கி தருகிறேன்: பெண் ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு உறுதி அளித்த கனிமொழி..!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (18:21 IST)
கனிமொழி பயணம் செய்த  பேருந்தின் பெண் ஓட்டுனர் வேலையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு வேறு வேலை வாங்கித் தருவதாக கனிமொழி உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்று காலை கோவையில் பெண் ஓட்டுனர் ஷர்மிளா என்பவரின் பேருந்தில் கனிமொழி எம்பி பயணம் செய்தார். இந்த நிலையில் பெண் ஓட்டுனருக்கும் பெண் நடத்துனருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து ஓட்டுனர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
ஆனால் தான் பணியில் இருந்து நீக்கவில்லை என்றும் ஷர்மிளா தானாகவே பணியை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட்டார் என்றும் பேருந்தின் உரிமையாளர் பேட்டி அளித்திருந்தார். 
 
இந்த நிலையில் தன்னால் ஓட்டுநரின் வேலை பறிபோனதை அடுத்து அவரிடம் தொலைபேசியில் பேசிய கனிமொழி வேறு வேலை வாங்கித் தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. விரைவில் கனிமொழி, ஷர்மிளாவுக்கு புதிய வேலை வாங்கித் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments