உமா மகேஸ்வரி கொலை வழக்கில் இன்று ஒரு முடிவு வரும் என போலீஸார் தரப்பில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விசாரணையின் பலனாக இந்த வழக்கில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உமா மகேஸ்வரி வீட்டில் திருடு போயிருந்த நகைகள் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தகவ்ல் தெரிவித்துள்ளனர்.
அதோடு இந்த கொலைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளாராம். கார்த்திகேயன் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன். சீனியம்மாள் இந்த வழக்கின் சந்தேக் வளையத்திற்குள் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கொலை வழக்கில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளி கார்த்திகேயனையும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும், பறிமுதல் செய்யப்பட்ட நகைகளையும் போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இதனால், அநேகமாக இன்று இந்த கொலை வழக்கிற்கு ஏதேனும் ஒரு முடிவு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.