Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள ஏடிஎம்-இல் கொள்ளை.. கண்டெய்னரில் தப்பிய கொள்ளையர்கள்.. மடக்கி பிடித்த தமிழக போலீஸ்..!

Siva
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (11:47 IST)
கேரளாவில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளையடித்து, அதன் பின்னர் கண்டெய்னரில் தப்பிய கொள்ளையர்கள், தமிழகத்தில் பிடிபட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு ஏடிஎம்மில் கொள்ளையடித்து, அந்த பணத்துடன் மர்ம கும்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கண்டெய்னர் லாரி செல்லும் வழியெல்லாம் விபத்துகளை ஏற்படுத்திக் கொண்டே, நிற்காமல் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கண்டெய்னர் லாரி, தமிழக எல்லையில் புகுந்தபோது, பொதுமக்கள் லாரி பற்றி புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் சுதாரித்து, உடனடியாக அந்த கண்டெய்னர் லாரியை விரட்டி, பிடித்து நிறுத்தினர்.

ஈரோடு மாவட்டம் குமாரபாளையம் அருகே இந்த லாரி பிடிபட்ட நிலையில்,  லாரியின் உள்ளே சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, லாரியில் இருந்தவர்களை விசாரித்ததில், கேரளாவில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளையடித்துவிட்டு தப்பியவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments