Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்தக்காரர்கள் வீட்டிலேயே கைவைத்த காதல் ஜோடிகள் – சிக்கியது எப்படி ?

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (08:45 IST)
சென்னையில் உள்ள காரப்பாக்கத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் திருடிய காதல் ஜோடி போலிஸாரிடம் சிக்கியுள்ளது.

சென்னை, போரூரை அடுத்துள்ள  காரப்பாக்கம் பகுதியில் உள்ள செங்குட்டுவன் தெருவில் ஜெகதீசன் என்பவரின் வீடு உள்ளது. இந்த வீட்டில் கடந்த வாரம் 21 ஆம் தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து திருடியுள்ளனர். இதுபற்றி அவர் காவல்நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்க, இதை ஏற்று போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களில் போலிஸார் ஆராய்ச்சி மேற்கொண்ட போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின்  முகம் தெளிவாகத் தெரிந்தது. அவர்களை அழைத்து விசாரித்தபோது அவர்கள் இருவரும் காதலர்கள் என்பதும் அவர்களின் பெயர் நித்யா மற்றும் கார்த்திக் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இருவரும் கொள்ளை அடிக்கப்படட் வீட்டின் உரிமையாளர் ஜெகதீசனின் உறவினர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அவர்களின் வீட்டுக்கு சென்று வீட்டை வேவுப்பார்த்து அவர் இல்லாத நேரம் பார்த்து வீடு புகுந்து திருடியுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ‘தங்கள் வேலையில் பெரிதாக வருமானம் இல்லாததால் சொகுசு வாழக்கை வாழ்வதற்காக இது போல உறவினர்களின் வீட்டில் திருடியதாக’ பதிலளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் ரூ.500 கோடி செலவில் 10 மாடி பஸ் நிலையம்.. ஆந்திர அரசு அறிவிப்பு..!

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய்.. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments