Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவன், குழந்தை வேண்டாம்! ஆண் போல மாறிய பெண்! – மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:55 IST)
மதுரையில் கணவன், குழந்தையை கைவிட்டு பெண் ஒருவர் தன் தோழியுடன் வாழ சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை அடுத்த பனங்காடியை சேர்ந்த சரவணன் மற்றும் ஜெயஸ்ரீக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் இருவருக்கும் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டில் ஜெயஸ்ரீ காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது மனைவியை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் ஒரு ஓட்டலில் ஜெயஸ்ரீ இருப்பதை உறுதிப்படுத்திய போலீஸார் அவரும் அவரது தோழி துர்காதேவியும் வாடகை வீட்டில் வசிப்பதை கண்டறிந்துள்ளனர்.

இருவரையும் மதுரை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். விசாரணையில் ஜெயஸ்ரீயும், துர்கா தேவியும் பள்ளி படிப்பதிலிருந்தே நெருக்கமான உறவு கொண்டிருந்ததும், இதையறிந்த பெற்றோர் ஜெயஸ்ரீக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்ததும் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான விசாரணையில் தான் தனது தோழி துர்காதேவியுடன் வாழவே விரும்புவதாக ஜெயஸ்ரீ உறுதியாக தெரிவித்து விட்டதால் நீதிமன்றம் அவர் முடிவுப்படி வாழ உரிமையுண்டு என்பதால் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments