Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
மதுரையின் சில பகுதிகளில் நேற்று ஒருமணி நேரம் கனமழைப் பெய்தது.
தமிழகத்தில் ஏப்ரல் முதலாக கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இதனால் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று மதுரையின் கோரிப்பாளையம் , தெற்கு வாசல் , பெரியார் , காளவாசல் , புதூர் , சிம்மக்கல் ஆகிய பகுதிகளில் சாலைகள் நீர் பெருக்கெடுத்து ஓடுமளவுக்கு மழைக் கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.