Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 பெண்களுக்கு ஆபாச மெஸேஜ் ! சென்னையில் இருந்த தென்காசி நபர் – போலிஸ் விசாரணையில் பகீர் தகவல் !

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (15:10 IST)
30 பெண்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தென்காசியை சேர்ந்த வினோத் என்னும் நபர் திருப்பத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி எனும் ஊரிலுள்ள இளம்பெண் ஒருவரின் மொபைலுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு எண்ணில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் அந்த நம்பரை தொடர்பு கொண்டு திட்ட முயல எதிர்முனையில் பேசிய பெண் குரல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து திருப்பத்தூர் போலீசார் மெஸேஜ் வந்த நம்பரை மொபைல் சிக்னல் மூலம் டிராக் செய்ய, அந்த நம்பர் சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்பு தொடர்ந்து அந்த நம்பரைக் கண்காணித்து வினோத் என்ற நபரைக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் கல்லூரி மாணவி ஒருவரின் செல்போனைத் திருடிய வினோத்,  அதில் இருந்த 30 பெண்களின் எண்களுக்கு இதுபோல் ஆபாச படங்களை அனுப்பியும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியும் நடந்துள்ளது தெரிந்துள்ளது.  வினோத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

வங்கதேசத்தினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகள் மொத்தமாக இடிப்பு.. டெல்லியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments