Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹால் டிக்கெட் தரலைனா கடும் நடவடிக்கை! – தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 2 மே 2022 (12:41 IST)
தமிழ்நாட்டில் பள்ளி பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் தராத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரக எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாநில பாடத்திட்ட அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சில தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு அப்பள்ளி நிர்வாகங்கள் ஹால்டிக்கெட் தர மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம், கல்வி கட்டணம் செலுத்தா விட்டாலும் அனைத்து மாணவர்களுக்கும் ஹால்டிக்கெட் வழங்கப்பட வேண்டும். கல்வி கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி ஹால்டிக்கெட் தர மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனநலம் பாதிக்கப்பட்ட 65-வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது!

மத்திய - மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள திட்டங்கள் ஒடுக்கப்பட்ட சமூக மக்களை முழுவதுமாக சென்று சேரவில்லை - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு!

தமிழக ஆளுநரின் விரோத செயல்பாட்டை கண்டித்து பொது மக்களே கொந்தளித்து தீர்வுகாண்பார்கள் -தமிழ் தேசிய தலைவர் பழ.நெடுமாறன் பேச்சு......

கருணாநிதி பேரன் உதயநிதி ஸ்டாலின் என்பதில் உங்களுக்கு வேணா சந்தேகம் இருக்கலாம் எங்களுக்கு இல்லை-முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு....

தவெக மாநாட்டு திடலில் பெரியார், காமராஜர் கட்-அவுட்டுகள்.. விஜய்யின் நோக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments