Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாயந்தது!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:22 IST)
கோவையில் பள்ளி மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டு அந்த பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பொன்தாரணி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர் அப்பள்ளி ஆசிரியர் அளித்த தொல்லையால் தன் மகள் இறந்திருப்பதாக காவல்துறையில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது அவரின் மீது குண்டர் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் இப்போது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்