Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க. ஸ்டாலின் விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி..

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (15:11 IST)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.  அபோது செய்தியாளர்களை அவர் சந்தித்தார். 
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், திமுக தலைவர்  ஸ்டாலின்   ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் என விமரித்தது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் : ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது என்று பதிலளித்தார். 
 
மேலும் , சிதம்பரம் விவகாரம் குறித்து அவர் கூறியதாவது : ஐ.என்.எக்ஸ், மீடியா விவகாரத்தில் சிதம்பரத்துக்கு பயமில்லை என்றால் விசாரணைக்கு அவர் ஒத்துழைத்திருக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பினார். சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து கைது செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியது அவர் தான் என்று தெரிவித்தார்.
இதையடுத்து,  தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி வருவதாக தகவல்கள் வெளியாவது குறித்து அவர் பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை.ஸ்கார்ட்லாந்து யார்டு போலீஸுக்கு இணையாக தமிழக போலீஸ் செய்பட்டு வருகின்றனர் . தமிழகம் முழுவதும் காவல்துறையினர் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றனர் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments