மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்.. பெண்கள் மகிழ்ச்சி..!

Siva
திங்கள், 10 நவம்பர் 2025 (16:00 IST)
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று  வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ.767 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, மகளிர் உரிமைத்தொகை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
 
இது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்த முதல்வர், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் இந்த தொகை நிச்சயம் கிடைக்கும் என்று உறுதி அளித்தார். 
 
மேலும், "திராவிட மாடல் 2.0 அரசிலும் இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிச்சயம் தொடரும்" என்றும் அவர் அறிவித்தார். இதுவரை 1 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு 27 மாதங்களில் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
 
தேர்தல் நெருங்கி வருவதால், வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்யுமாறு முதல்வர் வலியுறுத்தினார். அரியானா போன்ற மாநிலங்களில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளைக் குறிப்பிட்ட அவர், தமிழக வாக்காளர்கள் தங்கள் பட்டியலில் போலிகள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னைக்கு மட்டும் மெட்ரோ போதும்: கார்த்தி சிதம்பரம் கருத்தால் பரபரப்பு..!

தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்: பாகிஸ்தானின் மூன்று FC கமாண்டோக்கள்..!

இந்திய பாஸ்போர்ட் செல்லாது.. சீன பாஸ்போர்ட் வேண்டும்.. அருணாச்சல பிரதேச பெண்ணிடம் அடாவடி செய்த சீன அதிகாரிகள்..!

அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்ற விழா.. 161 அடி கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி..!

வங்கக்கடலில் இன்னொரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. நாளை உருவாக வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments