Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் சிறப்பு அதிகாரியை நியமிக்க மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

தேர்தல் சிறப்பு அதிகாரியை நியமிக்க மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்
, புதன், 8 மே 2019 (19:15 IST)
கோவையிலிருந்து தேனிக்கு நேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்றதற்கு இன்று திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தராவிடப்படாத நிலையில் வாக்கு இயந்திரங்களை ரகசியமாகக் கொண்டு சென்றது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின். 46 வாக்குச்சாவடிகளில் தவறு  என்ன என்பது பற்றிய அனைத்தையும் வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
 
ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டணத்திற்குரியது என திமுக கூறியுள்ளது.
 
மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நிகழ்கின்றன. சுந்தந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி தடுமாறுகிறார்.தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
 
தேர்தல் அதிகாரிகள் ஏதோ சில வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் போல நடந்து கொள்கிறார்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
வாக்குப்பதிவு இயந்திரங்களையும் , வாக்குப்பதிவு மையங்களையும் முழுமையாக பாதுகாத்திட வேண்டும்.தமிழகத்திற்கு சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். அதிகாரிகளின் செயல்பாடு ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டன  என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை இனப்போரில் இஸ்லாமியர்கள் யார் பக்கம் நின்றனர்?