Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணிமண்டபம்: மோடி திறந்து வைக்கிறார்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (08:22 IST)
புதுச்சேரியில் திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைக்கிறார். 

 
தமிழகத்தில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. 
 
ரூ.4000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ கல்லூரிகள் மூலம் வருடத்திற்கு 1,450 புதிய டாக்டர்கள் உருவாகி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் திறந்து வைக்கிறார். இந்த காணொளி நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்ட்வியா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். 
 
இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைக்கிறார். புதுச்சேரியில் ரூ.122 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.
 
மேலும் புதுச்சேரியில் 25வது இளைஞர் திருவிழாவை பிரதமர் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments